Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2022 22:17:12 Hours

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளால் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான செயலமர்வு

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட திருமதி வெரீனா நியூண்டெட்டர் அவர்கள் நவம்பர் 16 - 17 திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு தியத்தலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பாடசாலையில் விரிவுரை ஆற்றினார். மத்திய பாதுகாப்பு படைத் தலையைகத்தின் கீழ் பணியாற்றும் மொத்தம் 38 பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் இந்த இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்டனர். அதற்கமைய இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுத படைகளின் பிராந்திய பிரதிநிதி திரு ஆல்பர்ட் ஸ்கோன்வெல்ட், மற்றும் திட்ட ஆலோசகர் திரு சன்ன ஜயவர்தன ஆகியோர் அமர்வுகளில் கலந்து கொண்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வகிபங்கு', 'சர்வதேச மனிதாபிமானச் சட்டம்' மற்றும் 'மனித உரிமைகள்' மற்றும் பாதிக்கப்பட்டவர்களைத் தடுத்து வைத்தல், உள்நாட்டுப் பாதுகாப்பு, இராணுவத் தலையீடுகள் தொடர்பான ஏனைய அத்தியாவசிய அம்சங்களை மையமாகக் கொண்டு இவ் விரிவுரை நிகழ்தப்பட்டது.