Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2023 15:52:09 Hours

சம்பத் வங்கியுடன் இணைந்து 542 வது பிரிகேட் படையினர் மன்னார் சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பிப்பு

மாணவர்களிடையே பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 54 வது காலாட் படைப்பிரிவின் 542 வது காலாட் பிரிகேட் படையினர் முசலி பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 140 பாடசாலை மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள், உண்டியல்கள் மற்றும் பாடசாலை உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை (செப்.7) ஏற்பாடு செய்திருந்தினர்.

இந்நிகழ்வில் கூழாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பாலைக்குழை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகியவற்றினை சேர்ந்த 140 மாணவர்களுக்கு தலா ரூ.2000/= வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதுடன் உண்டியல்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சம்பத் வங்கியின் அனுசரணையுடன் 542 வது காலாட் பிரிகேட்டினர் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தனர். மேலும், அன்றைய நிகழ்ச்சியை ஒட்டி அந்த பாடசாலை வளாகங்களில் 140 மாங் கன்றுகளும் நடப்பட்டன.

542 வது காலாட் பிரிகேட்டின் தளபதி கேணல் டி.எல்.எம் சந்திரசேகர ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ அவர்களின் பணிப்புரையின் பேரில், 8 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் 542 வது காலாட் பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் அதிகாரி மேஜர் எம்.வி பெர்னாண்டோ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 542 வது காலாட் பிரிகேட்டின் தளபதி, பிரதேச செயலாளர், வலய கல்விப் பணிப்பாளர், சம்பத் வங்கியின் பிரதம முகாமையாளர், சம்பத் வங்கியின் பிராந்திய முகாமையாளர் மற்றும் சம்பத் வங்கியின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.