Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 08:15:20 Hours

சமிஞ்சைப் படையினர் பேரில் களுத்துறை சிறைச்சாலையில் இரகசிய கெமரா அமைப்பை நிறுவும் பணியில்

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும்தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது இலங்கை சமிஞ்சைப் படையணி (SLSC) புதிய இரகசிய கண்காணிப்பு (க்ளோஸ்-சர்க்யூட் தொலைக்காட்சி) பாதுகாப்பு கேமராக்களை களுத்துறை சிறைச்சாலையில் நிறுவதற்காக தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் அறிவையும் வழங்கியது.

இலங்கை இராணுவத்தின் தலைமை சமிஞ்சை அதிகாரியும் சமிஞ்சை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோகா மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் சானக பிரதாபசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிறுவல் உள்ளே மற்றும் அருகில் உள்ள பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் கண்காணிக்கும் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.

11 வது சமிஞ்சைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்.டி. கொத்தலாவாலாவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் குறுகிய காலத்தில் பணியை துல்லியமாக முடித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டங்கள் நீர்கொழும்பு மற்றும் மஹார சிறைச்சாலைகளுக்கும் விரிவாக்க திட்டமிடப்படுகின்றது.