Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 12:57:47 Hours

சமிஞ்சைப் படையணியின் புதிய படைத் தளபதி கிழக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

தலைமை சமிஞ்சை அதிகாரியும் இலங்கை சமிஞ்சை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் (SLSC) வெள்ளிக்கிழமை (20) 2 வது (தொ) இலங்கை சமிஞ்சைப் படை முகாமிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

அதன்போது 2 வது (தொ) இலங்கை சமிஞ்சைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் B.P உடகே அவர்களால் அன்புடன் வரவேற்றகப்பட்டதன் பின்னர் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு, படைத் தளபதி முகாம் வளாகத்தில் நிகழ்வின் நினைவாக மாங் கன்று ஒன்றினை நாட்டியதன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, படைத் தளபதி படையினரிடம் உரையாற்றுகையில் சமிஞ்சைப் படையினரின் எதிர்கால வளர்ச்சி குறித்து தனது நோக்கங்களை எடுத்துரைத்தார். பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்தில் கலந்துக் கொண்ட அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கட்டளை அதிகாரி அவருடன் இணைந்து புதிதாக கட்டப்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு, கட்டளை அதிகாரியினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2 வது (தொ) இலங்கை சமிஞ்சைப் படையணியின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் படை அலகின் நிர்வாக மற்றும் லழங்கல் விடயங்கள், தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால தேவைகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் அளித்தார்.

மேஜர் ஜெனரல் அசோகா பீரிஸ் கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து படையினருக்கும் 12 மாதங்களுக்குள் தலுகன முகாமின் தொழில்முறை தரத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகளை பாராட்டினார். படைத் தளபதி புறப்படுவதற்கு முன்பு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டுச் சென்றார்.