Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2023 20:41:12 Hours

சமிக்ஞை படையணி புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களை பாராட்டுகிறது

பனாகொடவில் உள்ள இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யுஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஆகியோருக்கு முறையான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 13) நடைபெற்றது.

புதிதாக நிலை உயர்வு பெற்ற இரு நட்சத்திர ஜெனரல்ளை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.கே.டி.அதிகாரி யுஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. உயிரிழந்த அனைத்து இலங்கை சமிக்ஞை படையணி போர் வீரர்களின் நினைவுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேஜர் ஜெனரல்கள் இருவரும் தனித்தனியாக இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவர்கள் இருவரும் சிறப்பு மேடைக்கு நிலைய தளபதியினால் அழைக்கப்பட்ட பின்னர் அணிவகுப்பு மைதானத்தில் இரண்டு தனித்தனி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமையக பணிநிலை அதிகாரிகளுடன் படங்களை எடுத்து அந் நாளின் நினைவுகளை சேர்த்தனர். பின்னர், இருவரும் இணைந்து இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரி மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ். ரத்நாயக்க என்டியு அவர்களை படைத்தளபதி அலுவலகத்தில் சந்தித்து மரியாதை செலுத்தினர்.

தேநீர் விருந்துபசாரத்தின் போது புதிதாக நிலை உயர்வு பெற்ற அதிகாரிகள், அதிகாரிகள் உணவகத்தில் இருந்த அதிகாரிகளுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், மரக்கன்றுகளை நாட்டினர்.

அன்றைய நிகழ்வின் நிறைவுக்கு முன், மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யுஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அதிகாரிகள் உணவகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் மதிய உணவுக்காக இணைந்தனர். நினைவுச் சின்னங்கள் பரிமாற்றதுடன் நிகழ்வு நிறைவுற்றது.