Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2021 21:59:10 Hours

'சன்குயிக்' நிறுவனத்தினர் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு 'சன்குயிக்' பக்கெட்டுகள் வழங்கல்

வரையறுக்கப்பட்ட 'சன்குவிக் லங்கா' நிறுவனத்தின் பிரதிநிதி நிர்வாகக் குழுவினர், நாடு முழுவதும் முன்னணி சேவை புரியும் பணியாளர்களின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, 100,000 சன்குயிக் பான பக்கெட்டுகளை கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கிவைத்தனர்.

இந்த சன்குயிக் பான பக்கெட்டுகளானது முன்னணி பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு அருந்துவதற்காக விநியோகிக்கப்பட்டது.

நன்கொடை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திரு மங்கள பெரேரா, பொது முகாமையாளர் திரு சந்திம சமரசிங்க மற்றும் ஆலோசகர் திரு பத்மலால் டி சில்வா ஆகியோருடன் இணைந்து, அதிகமான இராணுவத்தில் சேவையாற்றும் பெரும்பான்மையானவர்களின் அயராத கொவிட்-19 நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி 200 மி.லீ அளவுள்ள ரூ .6 மில்லியன் மதிப்புள்ள குடி பான பக்கெட்டுகளை இன்று (11) இராணுவ தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இராணுவ தளபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்குவதற்கு முன்னர் நன்கொடை நிறுவனம் எடுத்த இந்த முயற்சி முதலில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழங்கப்பட்டது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்கொடையை ஏற்றுக்கொண்டதுடன் நன்கொடையாளர்களின் சிந்தனை மற்றும் கொவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்காக முப்படையினர்களால் மேற் கொள்ளப்படும் சேவைக்குமான அவர்களின் பாராட்டினை பாராட்டியதோடு அதன் எதிர்கால முயற்சிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பின் போது நிர்வாக பணிப்பாளர் திரு மங்கள பெரேரா, பொது முகாமையாளர் திரு சந்திம சமரசிங்க மற்றும் ஆலோசகர் திரு பத்மலால் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.