13th August 2021 20:00:08 Hours
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, தலைமை சமிஞ்சை அதிகாரியும் சமிஞ்சைப் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேட் தளபதிகள் பணிநிலை அதிகாரிகள், 2 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி மற்றும் படையின் புதன்கிழமை (11) களனி ராஜா மகா விகாரை வரையான சந்த ஹிரு சேயவின் மாணிக்க கலசம் தாங்கிய வாகன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மகா சங்கத்தினரின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமாய விகாரையில் பொது வணக்கத்திற்காக 'சந்தஜிரு தூபியின் மாணிக்க கலசம் வைக்கப்பட்டிருந்தது. இது நா்டு முழுவதுமான 18 மாவட்டங்களில் உள்ள 48 விகாரைகளுக்கு 47 நாட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படவுள்ளது.
'சந்தஜிரு தூபியின் மாணிக்க கலசம் செத் பிரீத் பாராயணம் மற்றும் மத ஆசீர்வாதங்களுக்கிடையேயான ஊர்வலம் களனி ராஜமஹா விகாரையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் திகதி மாலை கம்பஹா சமா விகாரையை சென்றடைந்தது.