06th March 2023 08:30:47 Hours
ஆட்சேர்ப்பு பாடநெறி (பெண்கள்) இல-38 இன் விடுகை அணிவகுப்பு விழா சனிக்கிழமை (மார்ச் 04) சந்துன்புர மகளிர் படையணி பயிற்சிப் பாடசாலையில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆறுமாத கால ஆட்சேர்ப்புப் பாடநெறியில் இலங்கைப் பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இராணுவப் புலனாய்வுப் படையணி மற்றும் இலங்கை இராணுவப் மகளிர் படையணியை சேர்ந்த 71 பெண்கள் பயிற்சி பெற்றனர்.
அன்றைய பிரதம விருந்தினர் ஆட்சேர்ப்புப் பாடநெறி சிப்பாய்களினால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை ஏற்று கொண்டதுடன், அமைப்புக்கும் நாட்டிற்கும் அவர்களின் சேவையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து உரையாற்றினார்.
பாடநெறியில் சிறந்த செயல்திறனுக்காக பின்வரும் பாடநெறியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறந்த மாணவர் - பிடிஜிடிகே பெல்கொல்ல
சிறந்த உடல் தகுதி – ஜேஎம்டிஎம் ஜயசேகர
சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை - பிஎன்கே செவ்மினி