01st February 2025 12:47:32 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கேணல் கே.ஏ.பீ. குருப்பு யூஎஸ்பீ அவர்கள் இராணுவ சட்ட சேவைகள் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் புதிய பதில் பணிப்பாளராக 2025 ஜனவரி 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு சுருக்கமான விழாவில் கடமை பொறுப்பேற்றார்.
‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், கேணல் கே.ஏ.பீ குருப்பு யூஎஸ்பீ தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை வைத்தார். மரபுகளுக்கு பின்னர் புதிய பதில் பணிப்பாளர் குழு படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன் பணிப்பகத்தின் எதிர்காலத்திற்கான தனது தூரநோக்கினை எடுத்துரைத்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.