Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2023 19:13:00 Hours

கொஸ்லந்தவில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள்

கொஸ்லந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட கலிபனாவெல கிராம மக்களுக்கு மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, புதன்கிழமை (டிசம்பர் 13) மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் நடமாடும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தனர். திங்கட்கிழமை (டிசம்பர் 11) ஏற்பட்ட நிலச்சரிவினால் அவர்களது வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பேரழிவு தரும் மண் மேடுகளால் ஆறு வீடுகள் முழுவதுமாக சேதமடைந்ததுடன் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் குடியிருப்பாளர்கள் அனைவரும் வேறு இடங்களில் தற்காலிக தங்குமிடத்திற்கு இடம் மாற்றப்பட்டன.

எதிர்பாராத இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்தவர்களில் ஏராளமான முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளும் இருந்தனர்.

பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் முயற்சியின் பேரில் படையினரால் இடம்பெயர்ந்தவர்களுக்கான சுகாதார மருத்துவ வசதிகளை வழங்க தங்களின் உதவிகளை வழங்கினர். தற்போது கொஸ்லந்த மருத்துவர்கள், உளவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் சிறு ஊழியர்களின் பங்கேற்புடன் அங்கு சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.