Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2020 18:44:18 Hours

கொவிட் 19 தடுப்பு நிலையத் தலைவர் காலி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு விஜயம்

கடற்படையால் நிர்வகிக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் தனிமைப்படுத்தல் செயல்முறைகளை மதிப்பிடும் நோக்கில், பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா 25 திகதி பிற்பகல் காலி பகுதியில் உள்ள பல தனிமைப்படுத்தல் மையங்களுக்கு முன்னறிவிப்பு இன்றி விஜயம் மேற்கொண்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, காலியி பேயார்வே சன்செட் சேர்வீஸ் தொடர்மாடி குடியிருப்புகள், தருஷி விடுதி , உனவடுன சப்ரோன், காலி டொன் பேரியல் நேச்சர் ரிசோர்ட் ஆகியவற்றின் நிர்வாக முகவர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் தொடர்பாக கலந்துரையாடினார். அவர் குறிப்பாக தனிமைப்படுத்தல் பணிகள் ஒத்துழைப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டார்.

தெற்கு கடற்படைத் தளபதி, சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் விளக்கமளித்தனர். தளபதி திரும்புவதற்கு முன்னர் அப்பகுதி திட்ட கட்டளை அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.Best Authentic Sneakers | Nike Shoes