Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2020 20:45:11 Hours

கொவிட்-19 தடுக்கும் பணிகளில் ஈடுபடும் படையினருக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தெளித்தல் இயந்திரம் பரிசளிப்பு

கொவிட் - 19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவத்திற்கு ஆக்க பூர்வமான உள்ளீடுகளில் திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் கிருமிநாசினி தெளித்தல் இயந்திரம் ஒன்று மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரேணுக ரோவல் மற்றும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் ஒருங்கிணைப்பில் அயர்ன்மேன் 4x4 சமூக அவசர நிலை உதவிக் குழுவினால் (I-CERT) சமீபத்தில் பரிசளிக்கப்பட்டது.

அயர்ன்மேன் 4x4 சமூக அவசரநிலை உதவிக் குழுவின் (I-CERT) நிறுவுனரும் கண்டுபிடிப்பாளருமான திரு எஸ்.ஏ.எம். சந்திரசோம அவர்களினால் அனைத்து வாகனங்களிலும் பொருத்தக் கூடிய வகையிலும் பயன்படுத்த எளிதானதும் தொழில்நுட்ப ரீதியாக ஒலி எழுப்பக் கூடியதுமான நடமாடும் கிருமிநாசினி தெளித்தல் இயந்திரம் இன்றைய வேகமாக பரவும் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையினரின் நலன் கருதி பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இராணுவ தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இவ்வியந்திரம் குறுகிய பாதைகளில் கொண்டு செல்லக்கூடியதும் மனித தொடர்புகளை குறைத்து கொவிட் -19 பரவலை தடுக்கும் வண்ணம் நீள குழாயுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ இரசாயனத் உயிரியல் கதிரியக்க மற்றும் அணு படையினர் தற்போது இத்தெளிக்கும் இயந்திரத்தில் பொது இடங்கள், ரயில் நிலையம் போன்ற இடங்களில் தொற்று நீக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

இலங்கையின் அயர்ன்மேன் 4x4 சமூக அவசரநிலை உதவிக் குழுவானது (I-CERT) இவ் இடர் காலத்தில் பெரும் ஒத்துழைப்பு வழங்கும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். best Running shoes brand | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov