Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2020 21:31:40 Hours

கொவிட் – 19 வைரஸ் சமூகத்திற்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை அனைத்தும் சாத்திய நிலைகளில் கொவிட் மைய தலைவர் தெரிவிப்பு

கொவிட் – 19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகத்திற்கு வழங்கிய செய்திகளின் விபரம் கீழ்வருமாறு:

இம் மாதம் (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்தது ஊர்ஜிதப்படுத்தியமையால் சிறைச்சாலையிலிருந்த ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதும் எவரும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்தமை பரிசோதனையின் போது வெளியாகவில்லை அத்துடன் அன்றைய தினம் கண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் உள்ள நபர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டபோது 57 நபர்கள் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டன. இந்த புணர்வாழ்வு மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் மாரவில பகுதியில் வசித்து வந்த பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டன.

இந்த 56 நபர்கள் கொரோனா தொற்று நோய் நிமித்தம் சமூகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையெனவும், இந்த மையத்திலுள்ள 8 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்த நிலைமையின் நிமித்தம் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

நீதி அமைச்சினால் நிர்வாகித்து வரும் இந்த புணர்வாழ்வு மையத்திற்கு போதைக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வு அளிப்பதற்காகவும் சிகிச்சை பெருவதற்காகவும் வருகை தந்தவர்களினால் இந்த கொரோனா தொற்று நோயானது பரிவியுள்ளதாக சுகாதார அமைச்சின் விசாரனைகளின் போது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | nike air speed turf rose gold price per gram