Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2021 19:00:43 Hours

கொவிட் – 19 பரவல் தொடர்பில் யாழ். பொது மக்களுக்கு விழிப்புணர்வு

யாழ். மாவட்ட கொவிட் - 19 பரவல் தடுப்பு செயற்குழுவின் தலைவரும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் யாழ். குடாநாட்டின் 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவு சிப்பாய்கள் இணைந்து கொவிட் -19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை சனிக்கிழமை (14) நடத்தினர்.

இந்தத் திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு கொவிட் -19 பரவலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக முகக்கவசங்களை முறையாக அணிவது, சமூக இடைவெளியை பேணுதல், வைரஸ் திரிபுகள், நோய் அறிகுறிகள் மற்றும் பரவலுக்கான காரணங்கள் என்பவற்றோடு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்டவுள்ளன.