Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2021 16:34:07 Hours

கொவிட் பெரவலை கட்டுப்படுத்தும் செயலணி தலைவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கிளிநொச்சி படையினர் இடைநிலை பராமரிப்பு மையங்களை மேம்படுத்துகின்றனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க செவ்வாய்க்கிழமை (4) இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடுகள் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விசாரித்தார். தேவையற்ற தாமதங்கள் கறைத்து அவற்றை வரைவாக முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தார்.

கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த அறிவுறுத்தலின் பேரில், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் உடனடியாக அதன் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சேவை செய்யக்கூடிய பொருத்தமான கட்டிடங்களையும் இடங்களையும் இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களை பராமரிப்பதற்கான இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. நன்கு வடிவமைக்கப்பட்ட மூலோபாய திட்டத்தின் ஊடாக கிளிநொச்சியில் பணிபுரியும் இராணுவத்தினர் பகுதியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதிக அளவு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் திறம்பட செயல்பட்டு வருகிறனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் அறிவுறுத்தல்கள் மற்றும் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் அவசர நிலைமையின் போது அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க இடைநிலைப் பராமரிப்பு நிலையங்களாக பாரதிபுரம் மற்றும் முருகண்டி தனிமைப்படுத்தல் நிலையங்களை மேம்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக வெலகெதர, கிளி பாதுகாப்பு படைத் தலைமையக கேணல் பதவி நிலை மற்றும் கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையின் சிரேஸ்ட அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பங்குபற்றினர்.