Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 12:59:37 Hours

கொவிட் தடுப்பு செயலணி நிபுணர் குழு இறப்பு அறிக்கையின் தாமதங்களைத் தவிர்ப்பிற்கான சாத்தியங்களை ஆராய்வு

இன்று (6) பிற்பகல் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா குணவர்தன ஆகியோரின் பங்குபற்றலில் கொவிட் -19 பொது தன்மை, தகவல் பரிமாற்றம் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல் குறித்து மற்றுமொரு சுற்று கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை கூட்டம் தகவலின் அடிப்பமைத் தன்மை பற்றி விவாதித்தது, அந்த அறிக்கையில் சில நாட்களில் மிகவும் பழைய திகதிகளை உள்ளடக்கிய இறப்புக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திரட்டப்பட்டு அந்த நாளின் இறப்பு எண்ணிக்கை குறித்து பெறப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சற்று சிக்கலான எண்ணத்தை அளிக்கிறது.

அந்த வரிசையில் சில நேரங்களில் அந்த அறிக்கைகள் வேறு சில காரணங்களுக்காக நிகழ்ந்த மரணங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு பின்னரே இறுதி சடங்குகளுக்கு விடுவிக்கப்படுகின்றன. மக்கள் கவலைப்படாமல் இருக்க சரியான விரைவான பொறிமுறையினை பின்பற்ற வேண்டும் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

இந்த நிபுணர்கள் குழு கூட்டத்தில் வைத்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இந்த அம்சத்தைப் பற்றி ஆழமாக விவாதித்தனர் மற்றும் இறப்பு புள்ளிவிவரங்கள் அன்றைய எண்ணிக்கையுடன் பொருந்தக்கூடிய வகையில் அனுப்பப்படுவதில் ஏற்படும் தாமதத்தைத் தணிக்க எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். இதுபோன்ற மரணங்கள் தொடர்பான சட்டரீதியான தாக்கங்களையும், தேவையற்ற தாமதத்தைத் தவிர்ப்பதைக் கருத்தில் கொண்டு இந்த செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்த முடியும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்தனர்.