Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2021 08:57:04 Hours

கொவிட் தடுப்பு செயலணி தலைவர் முன்னுரிமைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து சிறப்பு சந்திப்பில் விளக்கம்

"எங்கள் முதல் முன்னுரிமை நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும், இரண்டாவது பரவலைக் குறைப்பது, மூன்றாவது வைத்தியசலைகளின் முகாமை நான்காவது முன்னுரிமை பொருளாதாரம் அத்தியாவசிய ஊழியர்களை பொருளாதார வாய்ப்புகளுக்கு பங்களிக்க கோருவது ஆகும். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி சில வைத்தியசாலைகளில் நோயாளர்களின் கொல்லளவைவிட உயரும் பட்சத்தில் அதனை முறையாக முகாமைத்துவம் செய்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கான முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் உட்பட நாம் அனைவரும் அதைச் செயல்படுத்த எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், "என்று கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா ராஜகிரியவில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற பணிக்குழுவின் மற்றொரு அமர்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

"ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்குப் பிறகு, மூன்று பிரிவுகளின் கீழ் நோயாளிகளை நிர்வகிக்க திட்டமிட்டுள்ளோம். அவை மூச்சு மற்றும் தீவிர பிரச்சனைகள் உள்ளவர்கள், முதல் வகையுடன் ஒப்பிடுகையில் குறைந்த தீவிரத்தன்மையுடன் காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் தொற்று உள்ளவர்கள் ஆனால் அறிகுறிகள் இல்லாதவர்கள் என்பன ஆகும் . இந்த மூலோபாயத்தை முதலில் மேல் மாகாணம் தொடங்கி ஏனைய பகுதிகளுக்கு விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஊடக வெளியீடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தொற்றாளர்களையும் வகைப்படுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இணைய வழி அழைப்பு மையம் இப்போது நிபுணர்களின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டுள்ளது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், "என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, நாங்கள் தடுப்பூசி வழங்கும் செயல்முறையைத் தொடங்கினோம். இப்போது வரை 19.7 மில்லியன் மக்களுக்கு ஐந்து வகையான மாத்திரைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் அத்தோடு 14.97 மில்லியன்மக்களுக்கு முழமையாக இரண்டு மாத்திரைகளையும் வழங்கி முடித்துள்ளோம். அதன்படி, 43% மக்கள் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளையும் பெற்றுள்ளனர். கடந்த வெள்ளியன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் தாக்கங்களையும் அவர் எடுத்துரைத்தார். "சமூக ஊடகங்களில் நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம் தொடர்பில் சில யூகங்கள் பரவி செல்கின்றன." இறப்பு விகிதத்தை நாங்கள் பார்க்கும்போது, இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு மாத்தரையேனும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆகஸ்ட் 13 அன்று நாங்கள் 160 இறப்புகளைச் சந்தித்தோம், அவர்கள் அனைவரும் எந்த தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை. இறப்பு விகிதம் மற்றும் தொற்றாளர்கள் எண்ணிக்க கடந்த ஒன்றரை வருட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் உச்சத்தை எட்டுகின்றன. இன்னும் நாங்கள் தினமும் 19,000 பிசிஆர் சோதனைகள் மற்றும் 25,000 விரைவான ஆன்டிஜென் சோதனைகள் செய்கிறோம், ”என்று ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறினார்.

"எங்களிடம் தடுப்பூசி மையங்கள் இருந்தாலும், சிலர் தடுப்பூசி மையங்களுக்கு வரத் தயாராக இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம். எனவே, நாங்கள் இராணுவம் மூலம் நடமாடும் தடுப்பூசி மையங்களைத் தொடங்கினோம், அதில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். மேலும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த கடற்படை நடமாடும் தடுப்பூசி வழங்கும்மையம் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு சென்றுள்ளது "என்று ஜெனரல் சில்வா கூறினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன மற்றும் பிற பங்கேற்பாளர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் பிரச்சினைகளையும் வெளியிட்டனர்.