Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2021 19:51:11 Hours

கொவிட் செயற்குழு பணிக்குழுவின் நிபுணநர்கள் நடைமுறை யுத்திகள் மற்றும் முன்னேற்றங்களை மதிப்பீடு

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று (30) காலை ராஜகிரியவில் நிபுணர்களுடனான மற்றுமொரு கூட்டம் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதியின் பணிப்பின் பேரிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 ஆம் திகதி வரை தொடர்வதற்கான காரணத்தை விளக்கினார். மேலும் நடந்துகொண்டிருக்கும் தடுப்பூசி வழங்கல் நடைமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளுக்கு இந்த கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நிபுணர்களின் கலந்துரையாடலுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா குணவர்தன பிற நிபுணர்களுடன் உடன் தலைமை தாங்கினார். அவர்கள் அனைவரும் தற்போதைய நிலைமைகள், கொடிய வைரஸின் பரவும் முறைகள் மற்றும் அவசரகால ஏற்பாடுகள், தற்போதைய யுத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகளை மதிப்பீடு செய்தல், வகைக்கூறல் அதிகாரிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் வைத்தியசாலைகள், இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள புதிய தொற்றாளர்கள் தொடர்பாக கலந்துரையாடுனர்.

இராணுவத்தின் 1/3 படையினர் மட்டுமே அதாவது சுமார் 60,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரும் அவ்வாறே என கொவிட் தடுப்பு செயலணி தலைவர் எடுத்துக்காட்டியதுடன். முன்னணியில் உள்ள பெரும்பான்மையினருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டது, இருப்பினும் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அவர்கள் நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் நிலைமையங்களை நடத்துவதற்கு அடி மட்டத்தில் அயராது பங்களிப்பு செய்கிறார்கள். ஜனாதிபதியின் ஆலோசனையின் படி உணவு பொருட்கள் மற்றும் மரக்கறி பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக அடுத்த சில நாட்களுக்குள் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து வீட்டு வாசல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் முறையை நாடு முழுவதும் மாவட்ட செயலகங்கள் ஊடாக செயல்படுத்தப்பட உள்ளது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்னுரிமைகளை கருத்தில் கொண்டு முப்படைகளும் பொலிஸாரும் தடுப்பூசி நடைமுறைகளை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை கூட்டத்தில் விளக்கினார். அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாட்டின் மிக முக்கியமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கல் முறைகள் விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

500,000 சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்தன் பின்னர் குருநாகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடர்த்தி, கொத்தணிகள், வைத்தியசாலை மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றவை தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தடுப்பூசி வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக கொவிட் தடுப்பு செயலணி தலைவர் விளக்கினார். மேலும் ஜூன் 6 ஆம் திகதிக்குள் ஒரு மில்லியன் தடுப்பூசி இலங்கைக்கு வரும். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, குருநாகலை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பு செயலணி தலைவர் புதுப்பிப்புகளை வழங்கியதன் பின்னர் புதிய கட்டுப்பாட்டு யுத்திகளைக் கடைப்பிடித்த பின்னர் நாட்டின் தற்போதைய நிலையை நிபுணர்களின் குழு உறுப்பினர்கள் மதிப்பாய்வு செய்தனர். மேலும் நிபுணர் குழு தொடர்புடைய தரவு மற்றும் தகவல்களை திறம்பட பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், தெளிவான தகவல்தொடர்பு மூலோபாயத்தை உருவாக்குதல், வேலையின் வேகம், வீடுகளில் இறப்பு பற்றிய தகவல்களைப் வழங்கல் மற்றும் இடைநிலைப் பராமரிப்பு நிலையங்களில் சவால்கள் மற்றும் சிரமங்களை மதிப்பீடு செய்தல், பி.சி.ஆர் பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சரிசெய்தல் சமீபத்திய நோய் தீர்க்கும் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான யுத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தடுப்பூசி வழங்களின் பல்வேறு நிலைகள், நாட்டில் உள்ள சுமார் 88,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கல், விளக்கினார். மேலும் சுகாதார ஊழியர்கள், முன் வரிசை தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டதுடன் அதனை செயல்படுத்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.