04th July 2021 18:00:03 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்படும் 15 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தின் நிர்மாண பணிகளின் முன்னேற்றம் மற்றும் வைத்தியசாலையின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகள் என்பவற்றை மீளாய்வு செய்வதற்கான விஜயமொன்றை புதன்கிழமை (30) இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் நிர்மாண பணிகள் இடம்பெறும் இடத்தை பார்வையிட்டார்.
இராணுவ வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்ணான்டோ, இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் கேபிஎன் பதிரன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய இந்த புதிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இராணுவத்தின் 2020-2025' முன்னோக்கு மூலோபாய திட்டத்திற்கு இணங்க வைத்திய வசதிகள் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், வைத்தியசாலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் நிர்மாண பணிகளை மேற்பார்வை செய்தார்.