Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 03:00:59 Hours

கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு 4 IV திரவ வெப்பசமநிலை உபகரணங்கள் அன்பளிப்பு

கனடாவைச் சேர்ந்த வைத்தியர் சித்ரலேகா அபேசிங்கவினால் கொவிட் சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான நான்கு IV திரவ வெப்பசமநிலை உபகரணங்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆலோசக நோயியல் நிபுணர் வைத்திய பிரிகேடியர் கீதிகா ஜெயவீர, மற்றும் கேணல் ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் வைத்திய சம்பிக்க அபேசிங்க ஆகியோரினால் குறித்த உபகரணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

டொக்டர் காமினி ஜெயவீர, வரையறுக்கப்பட்ட பால்கோ இன்டர்நேஷனல் டிரேடிங் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஷாகிர் ஏ லுக்மன்ஜி ,திருமதி ரேணுகா நில்மினி ரணசிங்க மற்றும் ஏனைய சிலர் திங்களன்று (4)ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.