Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2021 13:19:08 Hours

கொழும்பில் நடைபெறும் 'இலங்கை சுற்றுலா எக்ஸ்போ 2021' கண்காட்சியில் லாயா ஹோட்டலும் இணைவு

வன் கோல் பேஸ் கட்டிடத்தொகுதியில் பெய்ரா லேக் மற்றும் ஓசன் எவன்யூ இல் தற்போது இடம் பெற்றுவறும் 'இலங்கை சுற்றுலா எக்ஸ்போ 2021'’ கண்காட்சிகளில் இராணுவத்திற்கு சொந்தமான லாயா ஹோட்டல்களுக்கும் தனியொரு கண்காட்சிக்கூடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

'இலங்கை சுற்றுலா எக்ஸ்போ 2021' கண்காட்சியானது, வெளிநாட்டு வருவாயை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படுவதுடன், அதற்கான எதிர்கால திட்டமிடல்கள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக நடத்தப்படுவதோடு, இந்நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (18) ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி இக்கண்காட்சியில் கலந்துகொள்ள முடியுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி கொள்ளும் நோக்கில் ஐ.நா அங்கத்துவ நாடுகளின் சுற்றுலாத் தின நிகழ்வுகளுக்கு இணையாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு பிரயாண முகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள், ஹோட்டல் மற்றும் தங்குமிடங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் , சுற்றுலா தலங்களின் பிரதிநிதிகள், சுற்றுலாத் துறை தொழில் மையங்களில் கற்கும் மாணவர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களால் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் கொழும்பிலுள்ள 60 சுற்றுலாத் துறை தொடர்பான விற்பனை நிலையங்களில் இடம்பெறுகின்றன.