Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 19:00:29 Hours

கொமாண்டோ படையினரின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு

எம்டிவி தொலைக்காட்சி வலையமைப்பின் ‘சிரச 25-கெவால் 25’ எனும் நலன்புரி திட்டத்தினூடாக வரிய குடும்பத்திற்காக கடவத்தை,நுகேகொட மிஹாரவில் நிர்மாணிக்கப்பட்ட 8ஆவது புதிய வீடானது திங்கட் கிழமை 2 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, எம்பிசி மற்றும் எம்டிவி தொலைக்காட்சி வலையமைப்பின் குழு பணிப்பாளர் செல்வி நதீர வீரசிங்க, எம்பிசி வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி செல்வி நியோமி நாலவன்ச, எம்டிவி தொலைக்காட்சி வலையமைப்பின் சிவில் விவகார பணிப்பாளர் திரு பிரியந்த விஜேசிங்க, மற்றும் எம்டிவி வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு சுசர டினால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கணேமுள்ள கொமாண்டோ படையணியின் இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்னர். இதற்கான அணைத்து கட்டுமாண பொருட்களும் ‘சிரச’தொலைக்காட்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.

வருகை தந்த பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரச’தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பாளர்கள் , கொமாண்டோ படையணியின் மத்திய கட்டளைத் தளபதி கேணல் எ.எஸ்.பி. சில்வா ஆகியோர் வரவேற்கப்படனர். பயனாளியினால் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரச பிரதிநிதிகள் வெற்றிலை கீற்று வழங்கி மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

பிரதம அதிதியான மற்றும் சிரச நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து புதிய வீட்டினை திறந்து வைத்ததுடன் மங்களகர விளக்கினையும் ஏற்றினர். பயனாளிக்கு வீட்டுத் திறப்பினையும் வழங்கினர்.

இக் குறித்த வீட்டுத் திட்டமானது சிரச நிறுவனத்தின் வழிகாட்டலுடன் கிராம சேவை அதிகாரி பிரதேச செயலகத்தினூடாக தெரிவுசெய்யப்பட்டன. இல்லர வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த குறித்த கும்பத்தின் நிலையை அறிந்த நன்கொடையாளர்கள் இவ்வுதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, செல்வி நதீர வீரசிங்க மற்றும் திரு பிரியந்த விஜேசிங்க ஆகியோர் உரையாற்றினர். Adidas footwear | Nike Air Max 270