Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

08th March 2020 21:23:48 Hours

கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சாகசக் கண்காட்சி

கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2020ஆம் ஆண்டிற்கான கொமாண்டோ படையினரின் நடை பவனியானது இன்று மதியம் (08) பாரிய அளவிலான கொமாண்டோ படையினரை உள்ளடக்கி பம்பலபிடிய சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரை இடம் பெற்றது. இவ்வகையிலான மூன்று நடை பவனிகள் கண்டி சிலாபம் மற்றும் காலி போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் கொமாண்டோ படையினரின் ஒருங்கிணைப்பில் இப் பிரதேசங்களில் காண்படும் கொமாண்டோ படைத் தலைமையகம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமது நடை பவனியை வேறு பிரதேசங்களில் படையினர் மேற்கொண்டதுடன் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அத்துடன் வாலிபர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துச் சென்றனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் nஐனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி சுஐPவா நெல்சன் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார். இவ்வாறு வருகை தந்த அதிதிகளை கொமாண்டோ படைத் தலைமையகத்தின் தளபதியும் 57ஆவது படைத் தலைமையக தளபதியுமான மேஐர் nஐனரல் பீ ஏ பி சில்வா அவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியவர்களை கொமாண்டோ படையணியின் வௌ;வேறு பிரிவுகளில் பயிற்றப்பட்ட ஸ்நைபர் படையினர் பயணக் கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத எதிர்பு தொடர்பிலான படையினர் அத்துடன் விசேட அதிதிகள் பாதுகாப்பு படையினர் பரசூட் வீரர்கள் (கொம்பட் டைவர்ஸ் மற்றும் ஸ்கை டைவர்ஸ்) மற்றும் ஏயார் போன் போன்ற படையினர்கள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

அதன் பின்னர் இந் நிகழ்வில் கொமாண்டோ படையணியின் கீதம் இசைக்கப்பட்டதுடன் தாய் நாட்டிற்காக மனிதாபிமான நடவடிக்கையின் போது போரிட்டு உயிர் நீத்த கெமாண்டோ படையணியைச் சேர்ந்த 43 அதிகாரிகள் மற்றும் 689 படையினரை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாய் நாட்டிற்காக 40ஆண்டு கால சேவையை அர்பணிப்புடன் வழங்கிய கொமாண்டோ படையணி மற்றும் இப் படையணியின் சாதனைகள் போன்றன இதன் போது இராணுவத் தளபதியவர்களுக்கு விபரிக்கப்பட்டன.

இப் பாரிய சாகச கண்காட்சி நிகழ்வில் கொமாண்டோ படையினரால் தற்பாதுகாப்பு நுட்பம் சுற்றிவளைப்பு நிராயுதமாக்கல் மற்றும் மீட்புப் பணிகள் போன்ற செயற்பாடுகள் நிகழ்தப்பட்டதுடன் இவை பார்வையாளர்களை மிக வியப்பிற்குள்ளாக்கும் வகையில் காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கொமாண்டோ படையணியின் மரூன்ஸ் பேண்ட் வாத்திய குழுவினரால் இனிய பாடல்கள் இசைக்கப்பட்டது.

அதற்கமைய நாய்களின் சாகச கண்காட்சி நிகழ்வும் இவை துள்ளிப் பாய்தல் குறுக்கோட்டம் போன்றன காண்பிக்கப்பட்டதுடன் கொமாண்டோ படையினர் சங்ரில்லா ஹோட்டலின் உச்சத்திலிருந்து பாய்தல் போன்றவும் படையினரால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எம்ஐ -17 ஹெலிகொப்டரில் இருந்து பாய்தல் மற்றும் கடலில் சிறிய படகைப் பயன்படுத்தி அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற வியத்தகு நடவடிக்கைகள் இதன் போது கொமாண்டோ படையினரால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக ஏயார் போன் 19 பரசூட் வீரர்கள் 10000 அடி உயர்திலிருந்து 3000 வரையிலான அடி வரை காலி முகத்திடலில் தரையிரங்கினர்.

இந் நிகழ்வின் இறுதியில் பரசூட் வீரர்கள் (ஸ்கை டைவர்ஸ்) மேஜர் ஜெனரல் பியந்த சேனாரத்ன மற்றும் கேர்ணல் விஜித்த ஹெட்டியாராச்சி போன்றோர் உள்ளடங்களாக தமது திறமைகளை வெளிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து கொமாண்டோ படைத் தலைமயக தளபதியவர்களால் பிரதம அதிதியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. ஆன்று மாலை கொமாண்டோ படையினரால் மரூன்ஸ் நைட் எனும் தலைப்பிலான இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை வீரமிக்க கொமாண்டோ படையினர் தொடர்பான புதிய பாடலும் இதன் போது வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் இராணுவத் தலைமையகத்தின் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் கொமாண்டோ படைத் தலைமையக கவுண்சில் அதிகாரிகள் மற்றும் பல படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.