Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

'கொத்மலை ஸ்பீட் ஹில் கிளைம்ப் 2021' இல் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

விறுவிறுப்பானதும் தேசிய மட்டத்திலுமான 'கொத்மலை ஸ்பீட் ஹில் க்ளைம்ப் 2021', கார் மற்றும் மோட்டார் சைக்கிளோட்ட போட்டிகள், பெருமளவானோரின் பங்கேற்புடன் கொத்மலை பந்தயப் வீதியில் டிசம்பர் 10 முதல் 12 வரை நன்கு பரீட்சயமாக மோட்டார் சைக்கிளோட்ட ரசிகர்களின் ஆதரவுடன் இடம்பெற்றது.

எஸ்எம் சுப்பர் மோட்டார் 250/450 சீசீ போட்டியிலும் 125 cc முதல் 250 cc வரையிலான ஸ்பீட் ட்ரெயில் பிரிவுகளின் கீழான போட்டிகளில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற இராணுவ வீரர்கள் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் சரியான நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்த குழுவாக அறிவிக்கப்பட்டு 3 சிறந்த இடங்களை வென்றனர்.

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஐ மதுரங்க 51.268 வினாடிகளில் கடந்து வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டார். அதேநேரம் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் கோப்ரல் ஜே.எம்.எஸ்.ஜெயலத் 125 சிசி முதல் 250 சிசி வரையிலான ஸ்பீட் டிரெயில் பைக் போட்டிகளில் 3 வது இடத்தைப் பிடித்தார். மேற்படி இராணுவ மோட்டார் சைக்கிலோட்ட வீரர்கள் விளையாட்டுக் குழுவில் விறுவிறுப்பாக செயற்படும் வீரர்களாவர்.

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழு, இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுச் சங்கம் மற்றும் செங்கடகல மோட்டார் பந்தயக் கழகத்துடன் ஒத்துழைப்புடன் 2021 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.