09th September 2021 19:45:24 Hours
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக்கத்தின் ஏற்பாட்டில் 14 வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஆண்டுக்கான மாநாடு “நிலையான பாதுகாப்பு மற்றும் தேசத்தின் அபிவிருத்தி” என்ற தொனிப்பொருளில் இடம்பெறுவதுடன், நாட்டில் நிலவும் தொற்றுநோய் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களின் பங்கேற்புடன் இணைய வழி விளக்க காட்சிகளை அடிப்படையாக கொண்ட முன்மொழிவுகள் இடம்பெறவுள்ளன.
இணையவழியூடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தர் ஜெனரல் ஜெரார்ட் ஹெக்டர் டி சில்வா (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ,தேசிய பாதுகாப்பு கற்கைள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, ஏனைய பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்கள் மற்றும் தளபதிகள், பீடாதிபதிகள் மற்றும் பணிப்பாளர்கள், முன்னாள் வேந்தர்கள், முன்னாள் உப வேந்தர்கள் மற்றும் கல்வியலாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தொற்று நோய் பரவல் அச்சுறுத்தலான அமைந்திருந்தாலும் நாம் பாதுகாப்பு இலக்குகளை அடைந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமெனவும் நாடு பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மீட்கப்பட்டிருந்தாலும் முழு உலகமும் முகம் கொடுத்துள்ள தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலுக்கு நமது நாடும் முகம் கொடுத்துள்ளதெனவும் சுட்டிக்காட்டினார். இதன் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மலிந்த பீரிஸ் அவர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.