Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 08:50:23 Hours

கொண்டாட்டத்தையொட்டி செல்வபுர மக்களுக்கு 300 மதிய உணவு பொதிகள் பகிர்ந்தளிப்பு

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் குடாநாட்டு செல்வபுரம் கிராமத்தில் வசிக்கும் 300 பேருக்கு மதிய உணவு பொதிகளை படையினர் ஞாயிற்றுக்கிழமை (22) பகிர்ந்தளித்தனர்.

படையினர் மற்றும் பொது மக்களிடையே நல்லெண்ணம், நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான இச்சமூகத் திட்டத்தின் ஊடாக அந்த மதிய உணவுப் பொதிகள் குறித்த மக்களின் வீட்டு வாசல்களுக்கு எடுத்துச் சென்று வழங்கப்பட்டன. இது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் மத்தியில் அவர்களின் சுமைகள் ஓரளவு விடுவிப்பதற்கு உதவியாக அமைந்தது.

இந்த திட்டம் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லா அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் ஒரு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.