Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th September 2024 17:45:50 Hours

கொக்னஹார மகா வித்தியாலய மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 செப்டெம்பர் 26 அன்று அம்பாறை கொக்னஹார மகா வித்தியாலயத்தின் எழுபத்தெட்டு மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடாத்தப்பட்டது. இன்றைய ஆற்றல்மிக்க உலகில் திறமையான தலைமைத்துவத்திற்கு முக்கியமான அத்தியாவசிய திறன்கள், மதிப்புகள் மற்றும் முன்னோக்குகளுடன் இளம் மனதை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.