Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2025 16:16:41 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினால் வருடாந்த போதி பூஜை நிகழ்வு

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் தனது வருடாந்த போதி பூஜையினை பெல்லாங்வில ரஜ மகா விகாரையில் 29 ஜனவரி 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) திலுருக்ஷி விமலரத்ன அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

கெமுனு ஹேவா படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.