Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2024 19:16:11 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரினால் நன்கொடை வழங்கல்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதரவின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணியின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் 19 ஒக்டோபர் 2024 அன்று நன்கொடை நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்வின் போது, கெமுனு ஹேவா படையணி படையினரின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 11 நன்கொடைகள் வழங்கப்பட்டன. மேலும், 2023 க.பொ.த சா/த பரீட்சையில் 9ஏ பெற்று சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 2 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் வறிய குடும்பங்களுக்கு 2 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் மேலும் மாணவர்களுக்கு 15 பாடசாலை உபகரண பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.