Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2024 18:16:38 Hours

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம். மனதுங்க (ஓய்வு) காலமானார்

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.எம். மனதுங்க (ஓய்வு) அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (மார்ச் 21) காலை நாரஹேன்பிட்டிய கொழும்பு இராணுவ மருத்துவமனையில் தனது 59 வயதில் காலமானார்.

அவரது பூதவுடல் தற்போது தலங்கம, மகிந்த பனாகொட மலர்சலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பூரண இராணுவ மரியாதையுடன் அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) பொரளை பொது மயானத்தில் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.