Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 08:55:17 Hours

கென்ய பாதுகாப்பு அதிகாரி இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை, பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் புதுடில்லியில் உள்ள கென்யா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேணல் பசில் மவாம்பிங்கு மவாக்கலே, இலங்கைக்கான விஜயத்தின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 17 ) சந்தித்து மரியாதை செலுத்தினார்.

சுமுகமான சந்திப்பின் போது இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை நினைவுபடுத்தும் அதே வேளையில் பொதுவான விடயங்களில் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சுமூகமான சந்திப்பின் உச்சக்கட்டத்திற்கு முன்னதாக, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கேணல் பசில் மவாம்பிங்கு மவாக்கலே அவர்களுக்கு நினைவுச் சின்னத்தினை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.