30th April 2020 10:15:35 Hours
இலங்கை பொலிமர் உற்பத்தி மற்றும் மறு சுழற்சி சங்கத்தின் பிரதிநிதி குழுவினர், கோவிட் -19 நோயின் தாக்கத்தினை கருத்திற்கொண்டு இன்று காலை 29 ஆம் திகதி கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்ததோடு, கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடும் பாதுகாப்பு படை மற்றும் சுகாதார ஊழியர்களின் பயன்பாட்டிற்காக 500 பிரத்தியேக பாதுகாப்பு கவச சீருடைகளை வழங்கினர்.
குறித்த பாதுகாப்பு சீருடைகளானது வைரஸ் தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடுபடும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆயுத படையினர்களால் பயன்படுத்தப்படும் அதேநேரம் இந்த சீருடைகளானது தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. மேலும் அவர்களின் உதவிக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
பிஎம்ஆர்ஏ நிறிவனத்தின் தலைவர் திரு அருண விஜேதுங்க,பொருளாலர் திரு மகிந்த பனாகொட மற்றும் தயாரிப்பாளர் திரு உப்புல் பெனாண்டோ ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். Sneakers Store | GOLF NIKE SHOES