Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2021 19:02:46 Hours

குழந்தைகள் இருக்கும் 55 குடும்பங்களுக்கு இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் பால்மா பகிர்ந்தளிப்பு

கொழும்பை அன்மித்த சமூக சேவையாளர் ஒருவரின் அனுசரணையில் வழங்கப்பட்ட 110 பால் மா பாக்கெட்டுகளை 111 வது பிரிகேட் படையினர் குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகள் இருக்கும் 55 குடும்பங்களை மாத்தளை ஸ்ரீ ஷக்யசிங்கராமைக்கு புதன்கிழமை (15) அழைத்து வழங்கி வைத்தனர்.

மேலும் மாத்தளை மாவட்டத்தின் மாளிகத்தென்ன மற்றும் தியபுபுல கிராம அலுவலர்களால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2 (450 கிராம்) பால்மா பாக்கெட்டுகள் வீதம் வழங்குவதற்காக கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி பெரேரா என்பவரால் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

மாத்தளை ஸ்ரீ ஷக்யசிங்கராமய விகாரையின் தலைமை தேரர் வண, கந்தகெட்டிய ரேவத தேரரின் ஆசிர்வாதத்துடன் 11 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலில் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, கிராம சேவை அலுவலர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடித்து விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.