Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2019 22:15:19 Hours

குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களுக்கான ‘சுண்டைக்காய்’ பயிர்ச் செய்கை அறிமுகம்

சிவில் சமூகம் மற்றும் இராணுவ படையினர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் ஒரு சமூக திட்டத்தினூடாக 3000 துருகி சுண்டைக்காய் மரக்கன்றுகள் துணுக்கை பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கடந்த ஞாயிறு (23) ஆம் திகதி தெரக்கன்டல் சமூக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது வழங்கப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் எண்ணக்கருவிற்கமைய,653 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி மற்றும் அப்படைப்பிரிவின் படையினரால் துருகி சுண்டைக்காய் மரக்கன்றுகளானது இப்பிரதேச காலநிலைக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இக்குறித்த மரக்கன்றுகளுக்கான வளர்ப்பு முறைகள் மற்றும் உரமிடல் முறைகள் பற்றிய விளக்கமானது தெரக்கன்டல் விவசாய உத்தியோகத்தரினால் குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், தெரக்கன்டல் பாடசாலை அதிபர், படையினர் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. best Running shoes brand | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ