11th December 2024 08:16:05 Hours
2024 டிசம்பர் 07 அன்று தியத்தலாவ, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி – 217 வெற்றிகரமாக முடிவடைந்தது. 11 நவம்பர் 2024 அன்று ஆரம்பமாகிய இந்தப் பயிற்சித் திட்டமானது, 16 அதிகாரிகள் மற்றும் 85 சிப்பாய்களில் அத்தியாவசியமான குறிபார்க்கும் திறன்களை மேம்படுத்தியது.
பிரிகேடியர் ஆர்.பீ.முனிபுர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிறைவுரையை ஆற்றியதுடன், பாடநெறியில் பங்குபற்றியவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனைப் பாராட்டினார்.
பாடநெறியின் சிறந்த சாதனையாளர்கள்:
• முதலாமிடம்: இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லெப்டினன் ஏ.எம்.எம்.ஐ. அதிகாரிநாயக்க
• இராண்டாமிடம்: கொமண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஐ.கே. ரத்நாயக்க
• மூன்றாமிடம்: விஷேட படையணியின் கோப்ரல் என்.ஜி.டி.ஜே.பீ ஜயவர்த்தன