Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

குக்குலேகங்க மோட்டார் ஓட்ட போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த இராணுவம் அறிவிப்பு

பிரபலமான ஓட்டுநர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் வகையிலும், மோட்டார் ஓட்ட போட்டிகளில் திருப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் 2021 ஏப்ரல் 10- 11 ஆம் திகதிகளில் குக்குலேகங்க மோட்டார் பந்தய போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கை முழுவதிலும் இருந்து 120 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் 80 ய ஓட்டுநர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், கொழும்பு 02 அமைந்துள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணியின் தலைமையகத்தில் புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்படி விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இராணுவ மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினை, இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் பந்தய சங்கம் ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தின் உதவி தலைவி பிரிகேடியர் இந்து சமரகோன், மகாராஜா தொலைக்காட்சி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுசரா தினால், ஹட்ச் தொலைத்தொடர்பு வலையமைப்பின் இலங்கை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ரம்சினா லாய் மற்றும் இலங்கையின் மோட்டார் பந்தய சங்க தலைவர் திரு. இஸ்வான் அகமட் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குக்குலேகங்காவின் அழகிய மலைப்பாங்கான பகுதிகளில் முழுமையாக புதிய பந்தயப் பாதை தயார் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த பாதை 900 மீற்றர் தூரமும் 10 மீற்றர் அகலம் மற்றும் 60 பாகை சரிவையும்வி , 7 விளிம்புகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதில் 2 கூர்மையான வளைவுகள் உள்ளன என்பதும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 120 மீட்டர் உயரமுள்ள உயர்ந்த மலைப்பகுதியின் ஆரம்ப இடத்திலிருந்து முடிவுறும் இடத்திற்கு 90 மீற்றர் ஏற்றமான இடமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் விறுவிறுப்பாகவும் கோலாகலமாகவும் அமைந்திருக்குமென என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகள் முதன் முறையாக இலங்கையில் குக்குலேகங்க பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தெரிவித்தார். jordan Sneakers | Marki