Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 12:05:51 Hours

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படையிரால் பொலன்னறுவை நோயாளிகளுக்கு இரத்ததானம்

பொலன்னறுவை வைத்தியசாலை இரத்த வங்கியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படையினர் 10-11 ஆம் திகதிகளில் பொலன்னறுவை வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.

இரத்த மாற்றல் நிலையத்தின் திரு. சாமர குணவர்தன அவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தேவை கருதி இரத்த இருப்பின் அளவை மீள் நிரப்புவதற்காக படையினரின் உதவியினை நாடினார். அதன் பிரகாரம் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படையணியினைச் சேர்ந்தநாற்பத்தி இரண்டு இராணுவ சிப்பாயினர் மற்றும் அதன் கீழ் இயங்கும் படைப் பிரிவின் படையினர் இனைந்து குறித்த இரத்ததானத்தை வழங்கினர்.

பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் இலங்கை இராணுவத்தின் குறித்த மனிதாபிமான சேவையினை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | 『アディダス』に分類された記事一覧