22nd March 2023 21:40:56 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் 2023 மார்ச் 19-20 காலப்பகுதியில் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள காலாட் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி முதலில் 241 மற்றும் 242 வது காலாட் பிரிகேட், 18 வது விஜயபாகு காலாட் படையணி, 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, 11 மற்றும் 16 வது தேசிய பாதுகாவலர் படையணிகளுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் முஹுதுமஹா விகாரை மற்றும் தீகவாபி விகாரைக்கு விஜயம் செய்து தற்போது நடைபெற்று வரும் தூபி கட்டுமானத் திட்டத்தை மேற்பார்வையிட்டார்.
கள விஜயங்களின் போது ஒவ்வொரு பிரிகேட் மற்றும் படையலகுகளும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியை அன்புடன் வரவேற்றதுடன் அந்தந்தப் பகுதிகளில் தங்களின் வகிப்பங்கு மற்றும் பணி பற்றிய விவரங்களை முன்வைத்தனர். அந்த விஜயங்களின் போது அவர் அந்தந்த படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடினார். மேலும் அவர் தனது வருகையின் அடையாளமாக மரக்கன்றுகளை நட்டு ஒவ்வொரு அமைப்பிலும் அந்தந்த விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகள் மற்றும் நல்வாழ்த்துக்களை பதிவிட்டார்.
இவ் விஜயத்தின் போது 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுலசந்திரசிறி, பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.