27th May 2024 19:46:09 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 மே 23 முதல் 26 வரை வெலிகந்த நகரில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் வண்ணமயமான வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வெசாக் வலயத்தை திறந்து வைத்தார். பின்னர், கூட்டத்தினருடன் ஒரு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்ட தளபதி படையினரின் முயற்சிகளை பாராட்டினார்.
பின்னர், பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியின் ஏறக்குறைய 8000 பயணிகள் மற்றும் வெலிகந்தையைச் சுற்றியுள்ள மக்களுக்கு வசதியாக, வலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு தானத்தினை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்குபற்றினர்.