03rd November 2023 20:47:57 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 20 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வியாழன் (2) தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் பொலன்னறுவை வைத்தியசாலையின் இரத்த வங்கியின் நெருக்கமான ஒத்துழைப்புடன் 100 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நோயாளிகளின் நலனுக்காக இரத்தம் வழங்கினர்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரத்த தானம் செய்தார். மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று இராணுவத்தின் பெருந்தன்மையைப் பாராட்டினர்.