Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2024 16:05:30 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமைக அதிகாரிகளுக்கான மீட்டல் பாடநெறி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜூன் 2024 இல் லெப்டினன் முதல் கேப்டன் தேர்வுக்குத் தோற்றும் அதிகாரிகளுக்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2024 மே 15 முதல் 21 வரை மீட்டல் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டது.

மீட்டல் பாடநெறியில் 26 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் நன்கு தகுதி பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் குழு, பதவி உயர்வு தேர்வின் அனைத்து பாடங்களுக்கும் பொருத்தமான விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களைப் பயன்படுத்தி தங்கள் அறிவை பகிர்ந்து கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் இந் நிகழ்வு நடாத்தப்பட்டது.