09th June 2023 18:43:08 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் பொசன் தினத்தில் (ஜூன் 03) வெலிகந்த பிரதேசத்தில் உள்ள பக்தர்களுக்கு பலாக்காய் மற்றும் மரவல்லிக்கிழங்கினை தானமாக வழங்கினர்.
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த சுமார் 1500 பேருக்கு இந்த தானம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் வழங்கப்பட்டது. மேலும், படையினரால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான 'பொசன்' கூடுகள் வண்ணத்தையும் பாராட்டையும் பெற்றன.
மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அன்னதானத்தை ஆரம்பித்து வைத்து மாலையில் 'பொசன்' அலங்காரங்களை இயக்கிவைத்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கி ஆரம்ப நிகழ்விலும் கலந்துகொண்டனர்.