Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2021 10:45:45 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினரால் நடமாடும் தடுப்பூசி திட்டம்

60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்காக இராணுவத்தால் தொடங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி திட்டமானது, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் திங்கள்கிழமை (23) கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தகவல் பதிவு இயக்குனர்கள் ஆகிய கிழுக்களை கொண்ட அந்த தடுப்பூசி வாகனங்கள் அரச நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரைப்படி அந்தந்த மாவட்டச் செயலகப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

குறித்த தடுப்பூசி செயற்பாடுகள் ஒரு தனி ஆம்புலன்ஸ்சுடனான ஒரு மருத்துவ அதிகாரியினால் கண்காணிக்கப்படும் அதேவேளை ஏதாவது அவசர தேவைஏற்படின் அவர்களின் சேவை வழங்கப்படும்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் நெருக்கமாக மேற்பார்வை செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம் அந்தந்த 22, 23 மற்றும் 24 படைப்பிரிவுகளின் படைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளால் கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் ஏனைய தொடர்புடைய துறையினரின் நெருக்கமாக ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த நடமாடும் தடுப்பூசி சேவை கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக முன் டுக்கப்பட்டுவருகிறது.