Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2024 14:10:11 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினரால் கொக்கட்டிச்சோலை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 1.2 மில்லின் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மற்றும் விவசாய பொருட்களை வழங்கும் நன்கொடை நிகழ்வை 13 மார்ச் 2024 கொக்கட்டிச்சோலை கலாசார நிலையத்தில் நடாத்தினர்.

இந்நிகழ்ச்சியின் போது, 20 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 7,000.00 ரூபாய் பெறுமதியான சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன், தேவையுடைய கொக்கட்டிச்சோலை விவசாயிகளுக்கு 500 தென்னம் பிள்ளைகள், 120 கலப்பின விதை பொதிகள் மற்றும் 120 உர பொதிகள் உட்பட விவசாய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்வின் போது நவீன விவசாய முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.

இந்த முயற்சியானது கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சில்வர்மில் மற்றும் விடாகோ நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள், மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, திருமதி திலந்தி ரணவீர மற்றும் திரு. தினேஷ் சில்வா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.சி.எஸ். குமாரசிங்க மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வின் ஏற்பாட்டை மேற்பார்வையிட்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி கலந்து கொணடதுடன், அவர்களுடன் மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஆயர் வண.எபினேசர் ஜோசப் மற்றும் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளர் திரு எம்.எம். சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.