Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2021 17:59:16 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி 22 வது படைப்பிரிவு பிரதேசத்திற்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அண்மையில் 22 வது படைப்பிரிவு பிரதேசத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

முதலில், அவர் தவுல்வெவவில் உள்ள ஆட்சேர்ப்பு பயிற்சிப் கல்லூரிக்குச் விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, பயிற்சிப் கல்லூரியிலுள்ள ஊழியர்களுடன் வசதிகள் மற்றும் உபரணங்கள் குறித்து கேட்டறிந்துக்கொண்டார். அதனையடுத்து அவர் தனது விஜயத்தின் அடையாளமாக மா மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.

பின்னர், கும்புருபிட்டியில் உள்ள 221 பிரிகேடின் உத்தேச தலைமையக வளாகத்திற்குச் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

இதற்கிடையில், மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மத சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோமரங்கடவல ரங்கிரி உல்பத ரஜா மகா விகாரையின் வண. அஹுங்கல்லே ஸ்ரீ சீலவிசுத்தி நாயகே தேரர் அவர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.