Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2020 14:35:16 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (4) ஆம் திகதி மேற்கொண்டார்.

முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியை முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பானுக ரந்தெனிய அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதி அவர்களினால் இத்தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கு பாதுகாப்பு தளபதியவர்கள் இந்த விஜயத்தின்போது நிர்வாக விடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டார்.

அத்துடன் இத்தலைமையகத்தினுள் அமைந்துள்ள 3 ஆவது மின்சார பொறிமுறை இயந்திர படையணி தலைமையகத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி விஜயத்தை மேற்கொண்டார், அதன் போது இந்த படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோலித அல்மேதா அவர்கள் வரவேற்றார்.

இறுதியில் இந்த முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தி பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். latest jordan Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger