Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2025 15:37:23 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் 2025 ம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் 2025 ஏப்ரல் 8 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல் மற்றும் பலூன் ஊதும் போட்டிகள் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலரும் பங்கேற்றனர்.

24 வது காலாட் படைப்பிரிவு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் கொண்டாடியது.

மாவட்ட செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சிஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிஎல்எஸ் லலித் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

23 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஸ் சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர் பயிற்சி பாடசாலையின் படையினர் 2025 ஏப்ரல் 27 அன்று போர் பயிற்சி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் பங்கேற்றனர்.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் 2025 ஏப்ரல் 27 ம் திகதி சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

23 வது காலாட் படைப்பிரிவு ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு விழாவைக் கொண்டாடியது

22 வது காலாட் படைப்பிரிவின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

24 வது காலாட் படைப்பிரிவின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் 2025 ம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா