08th May 2023 22:40:30 Hours
கிழக்கு வெலிகந்த, மொனரதென்ன, சிங்கபுர, மனம்பிட்டிய மற்றும் போவத்த ஆகிய பிரதேசங்களில் உள்ள 3000 பொதுமக்களுக்கு வெசாக் போயா தினத்தன்று (5) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் படையினரின் விவசாயத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களும் இத் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
வெலிகந்த நகரில் பௌத்த தேரர்கள் சமய வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களின் காட்சிப்படுத்தலை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
வெலிகந்த மகா வித்தியாலயத்தில் 3 வது பொறியியல் சேவைப் படையணியின் படையினர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட பல வெசாக் கூடுகள் வெலிகந்த நகரப் பகுதியில் வண்ணமயமாக காட்சியளித்தன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் வழங்கல் படையலகுகளின், அனைத்து பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இந் நிகழ்வு வெற்றியடையச் ஒன்றிணைந்தனர்.