Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2019 15:59:33 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தை அன்மித்த படைத் தலைமையங்களின் பங்களிப்போடு போதி பூஜை வழிபாடு

பொலன்நறுவைப் பிரதேசத்தில் உள்ள வெஹெர ரஜமஹா விகாரையில் பௌத்த மத வழிபாடுகளான அலரிப் பூ வழிபாடானது கடந்த சனிக் கிழமை (08) இடம் பெற்றதோடு இதற்கான ஒத்துழைப்பை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் கடற்படை விமானப் படை அதிகாரிகள் அத்துடன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் வழங்கினர்.

இவ் வழிபாட்டு நிகழ்வில் அனைத்து பக்தர்கள் போன்றனர் கலந்து கொண்டனர். அத்துடன் முப்படையினர் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் இணைந்து வழிபாடுகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியதுடன் இதற்கான வழிபாடுகளை உனகல வெஹெர ரஜமஹா விகாயின் விகாராதிபதியான திவுல்லே அஸ்ஸஜித் தேரர் நிகழ்த்தினார்.

இதன் போது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான பிரிகேடியர் வன்தித்த மஹிங்கந்த மற்றும் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Nike footwear | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092