01st November 2024 11:09:56 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 21வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 27 ஒக்டோபர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக மைதானத்தில் கரப்பந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளை நடாத்தியது.
பதினாறு அணிகள் கிண்ணத்துக்காக போட்டியிட்டன. கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியனுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
கரப்பந்து போட்டியில் 7 வது இலங்கை பொறியியல் அணி வெற்றியீட்டியதுடன், 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
கிரிக்கெட் போட்டியில், வழங்கல் கட்டளை அணி சம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியதுடன், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்த்தின் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. போட்டி முழுவதும் சிறப்பாக செயற்பட்ட தனி நபர்களுக்காக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.